குமாரபாளையம், வெப்படை, பள்ளிபாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
குமாரபாளையம், வெப்படை, பள்ளிபாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை குமாரபாளையம் நகர், கத்தேரி, புள்ளாகவுண்டம்பட்டி, சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டாங்குட்டை, எதிர்மேடு, கல்லாங்காட்டு வலசு, மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வெப்படை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்படை, பாதரை, பாதரை-இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான் காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைகாடு, சின்னாகவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம் மற்றும் எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
சமயசங்கிலி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சமயசங்கிலி துணை மின்நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்குட்டைபாளையம், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், கலியனூர், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சீராம்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், சாணார்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், காந்திநகர், கோட்டைமேடு, ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம், பவானி மெயின்ரோடு, அண்ணா நகர், நெரிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைராபாளையம், வாட்டர்் ஆபீஸ் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, தண்ணீர்பந்தல்பாளையம், சத்திரம் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணாநகர், காடச்சநல்லூர், குச்சிப்பாளையம், கே.எஸ்.ஆர் கல்வி நகர், தோக்கவாடி, தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், மொளசி, காட்டு வேலாம்பாளையம் மற்றும் வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை சங்ககிரி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story