பள்ளிப்பட்டு அருகே லாரி மோதி தொழிலாளி பலி


பள்ளிப்பட்டு அருகே லாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Dec 2018 3:30 AM IST (Updated: 4 Dec 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு அருகே சி.ஆர்.பட்டடை என்ற குதிரை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 53). கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை தனது கிராமத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் குமாரராஜுப்பேட்டை கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

அங்குள்ள குசஸ்தலை ஆற்று பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. சிலஅடி தூரத்துக்கு மோட்டார்சைக்கிளை லாரி இழுத்துச்சென்றது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முனுசாமி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, பலியான முனுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வை த்தனர்.

மேலும் இது தொடர்பாக லாரி டிரைவரான பள்ளிப்பட்டு ராதா நகரைச் சேர்ந்த கமலகண்ணன் (57) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான முனுசாமிக்கு லட்சுமி (48) என்ற மனைவியும், யுவராஜ் (33) என்ற மகனும், உமா(30), உதயா(25) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Next Story