மின்சாரம் வழங்கக்கோரி மன்னார்குடியில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மின்சாரம் வழங்கக்கோரி மன்னார்குடியில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் வழங்கக்கோரி மன்னார்குடியில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுந்தரக்கோட்டை,

கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவு சேதம் ஏற்பட்டது. மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதியில் இருளில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார்குடியை அடுத்த ராஜகோபாலபுரம் பகுதிக்கு இன்னும் மின்சாரம் வழங்கவில்லை. இந்த நிலையில் மின்சாரம் வழங்கக்கோரி மன்னார்குடி-திருமக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருமக்கோட்டை சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல மன்னார்குடியை அடுத்த மேலத்திருப்பாலகுடி பகுதியில் பொதுமக்கள் மின்சாரம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-வடசேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story