காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை கலெக்டர் வெளியிட்டார்
ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கியானது மாவட்டங்களுக்கான உத்தேச கடன் திட்ட அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு வருகிறது.
காஞ்சீபுரம்,
அந்த அறிக்கையில் மாவட்டத்துக்கு ரூ.5,908.70 கோடி சாத்தியமான முன்னுரிமை கடனாக கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதில், விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழிலுக்கு ரூ.4,041.52 கோடியும், விவசாய கட்டமைப்புக்கு ரூ.222.99 கோடியும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
குறு மற்றும் சிறு தொழிலுக்கு ரூ.412.37 கோடியும், வீட்டுக்கடன், கல்விக்கடன், ஏற்றுமதி போன்ற துறைகளுக்கு ரூ.637 கோடியும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் விஜயலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹெப்சூர் ரகுமான், நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சுப்புராஜ், ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் வெங்கடேஷ், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசராவ் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதன்படி இந்த ஆண்டும் 2019-20-ம் ஆண்டுக்கான காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு சாத்தியமான உத்தேச கடன் திட்ட அறிக்கையை நபார்டு வங்கி தயாரித்து உள்ளது. இந்த கடன் திட்ட அறிக்கையை அனைத்து வங்கியாளர்கள் கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் மாவட்டத்துக்கு ரூ.5,908.70 கோடி சாத்தியமான முன்னுரிமை கடனாக கொடுக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதில், விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழிலுக்கு ரூ.4,041.52 கோடியும், விவசாய கட்டமைப்புக்கு ரூ.222.99 கோடியும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
குறு மற்றும் சிறு தொழிலுக்கு ரூ.412.37 கோடியும், வீட்டுக்கடன், கல்விக்கடன், ஏற்றுமதி போன்ற துறைகளுக்கு ரூ.637 கோடியும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் விஜயலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹெப்சூர் ரகுமான், நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சுப்புராஜ், ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் வெங்கடேஷ், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசராவ் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story