மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடு துறையில் அரசியில் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அளித்த ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதித்து அணை கட்ட அனுமதியளித்த மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும். காவிரிநீர் பங்கீட்டு இறுதி தீர்ப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலுகுபேந்திரன், ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சபீக் அகமது, த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஷேக்அலாவுதீன், நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் காளிதாஸ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தளபதிராஜ், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story