தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2018 4:45 AM IST (Updated: 4 Dec 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 710 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45½ லட்சம் மதிப்பிலான 15 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவ கூட்டுறவு இணைய தலைவர் சேவியர், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பரிதாஷெரின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story