புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிறை வார்டன்களுக்கு 6 மாதகால பயிற்சி தொடங்கியது


புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிறை வார்டன்களுக்கு 6 மாதகால பயிற்சி தொடங்கியது
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிறை வார்டன்களுக்கு 6 மாத கால பயிற்சி தொடங்கியது.

திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறை வார்டன் ஆகிய காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தேர்வான 2-ம் நிலை காவலர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி தொடங்கியது. இந்தநிலையில் சிறைத்துறையில் வார்டன் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 414 பேருக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் நேற்று பயிற்சி தொடங்கியது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சி பள்ளி முதல்வர் முருகேசன் தொடக்கவுரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற கூடுதல் கண்காணிப்பாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டார். பயிற்சி பள்ளி துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிறை வார்டன்களுக்கு 6 மாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கவாத்து, துப்பாக்கிகளை கையாளுதல், சட்டம் சார்ந்த வகுப்புகள், சிறையில் அன்றாட பணிகள் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள உள்ளனர்.

பயிற்சிக்கு பிறகு வார்டன்கள் பல்வேறு சிறைச்சாலைகளில் பணிக்கு அனுப்பப்படுவார்கள். ஏற்கனவே திருச்சி சிறையில் புதிதாக தேர்வான உதவி ஜெயிலர் 64 பேருக்கு பயிற்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story