குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து வாகனம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார்


குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து வாகனம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 20 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று தொடக்கி வைத்து பேசினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 20 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த ரோந்து வாகனம் தொடக்கி வைக்கப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரிடம், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை மனுவாக அளித்து தீர்வுகாணலாம். மேலும் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் புகார்கள் பெற்று அதன்பேரில் விசாரணை செய்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story