தூத்துக்குடி மாவட்ட சிறையில் விசாரணை கைதி திடீர் சாவு
தூத்துக்குடி மாவட்ட சிறையில் விசாரணை கைதி திடீரென இறந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகன் பரமசிவன் (வயது 42). கடந்த 1-ந்தேதி உடன்குடி ஜே.ஜே.நகர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இவரை மெஞ்ஞானபுரம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பரமசிவன் தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு விசாரணை கைதியாக இருந்த அவருக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அப்போது அவர் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.
உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பரமசிவன் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கைதி பரமசிவனுக்கு சரோஜா, லிங்கேசுவரி என்ற 2 மனைவிகளும், 7 குழந்தைகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story