கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2018 3:45 AM IST (Updated: 4 Dec 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் இருந்து பிள்ளையார்நத்தம் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு மது பிரியர்களால் இடையூறு ஏற்படுகிறது. சிலர் மது குடித்து விட்டு, விவசாய நிலங்களில் மது பாட்டில்களை வீசி செல்கின்றனர்.

எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். முருகன் தலைமை தாங்கினார்.

பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, துணை தலைவர் பரமேசுவரன், பாரதி மக்கள் இயக்க தலைவர் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஆத்தியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக உதவியாளர் குமார ராஜாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Next Story