டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடிக்க இலவச பஸ் பாஸ்: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குடிமகன் நூதன கோரிக்கை


டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடிக்க இலவச பஸ் பாஸ்: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குடிமகன் நூதன கோரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 3 Dec 2018 9:08 PM GMT)

மோட்டார்சைக்கிளில் சென்றால் போலீசார் பிடிக்கிறார்கள் ஆதலால் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடிக்க இலவச பஸ் பாஸ் கேட்டு குடிமகன் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நூதன கோரிக்கை மனு கொடுத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு வந்த கூலி தொழிலாளி செங்கோட்டையன் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

எங்கள் ஊரான வெள்ளோட்டாம்பரப்பு அருகில் டாஸ்மாக் கடை கட்டப்பட்டு உள்ளது. இந்த கடை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. நான் கூலி தொழிலாளி என்பதால் வேலை முடிந்ததும் சலிப்பு தெரியாமல் இருக்க டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்துவது வழக்கம். தற்போது மதுகுடிப்பதற்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சென்று வரவேண்டி உள்ளது. மேலும் மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வரும்போது சில நேரங்களில் போலீசார் என்னை பிடித்துவிடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையென்றால் நான் பஸ்சில் சென்று குடித்துவர ஏதுவாக எனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story