நாளை மறுநாள் பாபர் மசூதி இடிப்பு தினம்: நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு


நாளை மறுநாள் பாபர் மசூதி இடிப்பு தினம்: நெல்லை மாவட்டத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 4 Dec 2018 3:45 AM IST (Updated: 4 Dec 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நெல்லை, 

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய ஊர்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வழிபாட்டு தலங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ரெயில்வே தண்டவாளங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. நெல்லை புறநகர் பகுதிகளில் சுமார் 1,500 போலீசாரும், நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Next Story