புனேயில் இருவேறு விபத்துகளில் 4 பேர் பலி


புனேயில் இருவேறு விபத்துகளில் 4 பேர் பலி
x
தினத்தந்தி 4 Dec 2018 4:51 AM IST (Updated: 4 Dec 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் நடந்த இருவேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

புனே,

புனே பீமா-கோரேகாவ் பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் மானே (வயது38), தத்தா ராஜேந்திரா காலுராம் ஜாதவ்(42) ஆகிய 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, இருவர் மீதும் பலமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையே அந்த கார் சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை- புனே நெடுஞ்சாலையில் பிம்பலோலிகாவ் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மும்பையை சேர்ந்த ஜாவேத் (40), இஸ்மாயில் சேக்(65) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story