சமூக வலை தளங்களில் அவதூறு: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

சமூக வலை தளங்களில் அவதூறு: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 4 Dec 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கிருஷ்ணன்வக சமுதாய பேரவை நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு கிருஷ்ணன்வக சமுதாய பேரவை நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு மற்றும் அகஸ்தீஸ்வரம் ஆகிய தாலுகாக்களில் இந்து கிருஷ்ணன்வக (குறுப்பு) சமுதாயத்தினர் வசித்து வருகிறோம். சிறுபான்மை பிரிவை சேர்ந்த நாங்கள் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கை நடத்துகிறோம். இந்த நிலையில் எங்களை கொச்சைப்படுத்தியும், கீழ் தரமாகவும் சமூக வலை தளங்களான பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்அப் ஆகியவற்றில் செய்திகள் பரவி வருகின்றன. இதை பரப்பும் சமூக விரோதிகளை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவதூறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றுஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story