தாம்பரம் பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு
தாம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, தாம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். தாம்பரம் தர்காஸ் சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே ரூ.3.26 கோடியில் நடைபெறும் 7 கண் பால பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது பணியின் முன்னேற்றம் குறித்தும், பணி முடிவதற்கான காலம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு அதிகாரிகள், அதிக மழை பெய்தாலும் தண்ணீர் தடைபடாமல் செல்லத்தக்க வகையில் பணிகள் நடைபெறுவதாக கலெக்டரிடம் தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து தர்காஸ் சாலையில் வெள்ள தடுப்பு பணியாக ரூ.20 கோடியில் கான்கிரீட் மூடியுடன் கூடிய மூடு கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் பணி நடைபெறும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவது தொடர்பாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் சோமங்கலம் அடையாறு கிளை வாய்க்காலை பார்வையிட்ட அவர், அங்கு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு திட்டஅறிக்கை சமர்ப்பிக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
பின்னர் சிட்லபாக்கம் பேரூராட்சி பாபு தெருவில் ரூ.8 கோடியில் கான்கிரீட் மூடியுடன் கூடிய மூடு கால்வாய் அமைக்கும் பணிக்கு, பூமிக்கு அடியில் செல்லும் மின்கம்பி வழிதடங்களால் இடையூறு ஏற்படாத வகையில் செய்து கொடுக்கும்படி மின்வாரிய அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

Related Tags :
Next Story