பொன்னேரி அருகே முதல் மனைவி அடித்துக்கொலை தொழிலாளி கைது
பொன்னேரி அருகே முதல் மனைவியை அடித்துக்கொலை செய்து உடலை கோணிப்பையில் கட்டி முள்புதரில் வீசியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 35). வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சோனியா (28) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அருள் சோனியாவின் தங்கையான சூர்யா (25) என்பவரை 2-வதாக திரு மணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி சோனியாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அருள் அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் அருள், சோனியா இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் சோனியாவை காணவில்லை. குழந்தைகள் அம்மா எங்கே? என்று கேட்டபோது அவரை கொன்றுவிட்டதாக அருள் தெரிவித்தார். இதையறிந்த சூர்யா இது குறித்து பொன்னேரி போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அருள், சோனியாவை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் உடலை ஏரியில் உள்ள முள்புதரில் வீசியதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து போலீசார் சோனியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அருளை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story