புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரத்து 227 பேர் அமைச்சர் தகவல்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரத்து 227 பேர் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகப்பட்டினம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் வேலுமணி, ஓ.எஸ்.மணியன் தலைமையில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் கஜா புயலின் தாக்கத்தினால் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக 252 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரண முகாம்களில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 822 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை சார்பில் 2 ஆயிரத்து 212 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 297 பேர் பயனடைந்துள்ளனர். 266 நிலையான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 14 ஆயிரத்து 617 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். 571 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 88 ஆயிரத்து 238 கால்நடைகள் பயனடைந்துள்ளன. மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள் கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 435 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல 28 ஆயிரத்து 614 மின்கம்பங்களும், 442 டிரான்ஸ்பார்மர்களும் இதுவரை சீரமைக்கப்பட்டுள்ளன.
6 ஆயிரத்து 227 பேர் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் 11 ஆயிரத்து 780 பேர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் 24 மணி நேரமும் செயல் படுவதற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சுகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story