தாம்பரத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை கடத்த முயற்சி


தாம்பரத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை கடத்த முயற்சி
x
தினத்தந்தி 5 Dec 2018 4:00 AM IST (Updated: 5 Dec 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் மயக்கமருந்து கொடுத்து பள்ளி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரம், 

கிழக்கு தாம்பரம், கண்ணகி தெருவை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் தினமும் காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ‘டைப் ரைட்டிங்’ வகுப்பிற்கு சென்றுவருவது வழக்கம்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல அங்கு மாணவி சென்றபோது சரக்கு வேன் ஒன்று அவரை வழிமறித்தது. அப்போது அதில் இருந்து இறங்கிய 3 பெண்கள், திடீரென மாணவியை பிடித்து அவரது வாயில் மயக்க

மருந்தை ஊற்றி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்றார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மாணவியின் தந்தை சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காலை 5 மணியில் இருந்து 7:30 மணி வரை அந்த தெருவில் எந்த ஒரு சரக்கு வாகனமும் செல்லவில்லை என 

தெரியவந்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் விசாரித்தபோது சரக்கு வேன் அப்பகுதி வழியாக வரவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே உண்மையில் என்ன நடைபெற்றது என அந்த மாணவியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story