வேலூரில் அரசு டாக்டர்கள் போராட்டம் புறநோயாளிகள் அவதி
மத்திய அரசு டாக்டர் களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி வேலூரில் அரசு டாக்டர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பாதிக் கப்பட்டனர்.
அடுக்கம்பாறை,
தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 15 ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் பதவி உயர்வை 13 ஆண்டுகளாக குறைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், புறநோயாளி களுக்கான சிகிச்சையை புறக்கணிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு டாக்டர் கள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இங்கு சிகிச்சைக்காக நூற்றுக் கணக்கான நோயாளிகள் வந்திருந்தனர். அவர்கள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து அவர் களுக்கு பயிற்சி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப் பட்டது.
வேலூரில் உள்ள பென்ட் லேன்ட் அரசு மருத்துவ மனையில் டாக்டர் செந்தாமரை கண்ணன் தலைமையில், புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷமிட்டனர். இதில் டாக்டர்கள் பிரகாஷ் அய்யப்பன், சந்தோஷ், சதீஷ், அனிதா மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
பென்ட்லேன்ட் மருத்துவ மனைக்கு தினமும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். வழக்கம்போல நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். டாக்டர்களின் போராட்டம் காரணமாக சிகிச்சை பெற முடியாமல் அவர்கள் பாதிக் கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்து நண்பகல் 12 மணிக்கு பிறகு சிகிச்சை பெற்றனர்.
ஜோலார்பேட்டை வட்டார அளவில் ஏலகிரி மலை, சின்னமோட்டூர், ஜோலார்பேட்டை, தாமலேரி முத்தூர், வெலக்கல்நத்தம், புதுப்பேட்டை ஆகிய சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 21 பேர் ஜோலார் பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி தலைமை யில் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.

Related Tags :
Next Story