சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகிரி தீரன் சின்னமலை சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகிரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகிரி தீரன் சின்னமலை சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர்கள் வேல்சாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடைகளில் பொருட்கள் முழுமையாக வழங்க வேண்டும். வினியோக முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஒன்றிய பொருளாளர் சண்முகம், இந்திய மாதர் சம்மேளனத்தின் நிர்வாகி செல்வி உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ரணதிவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story