ஈரோடு அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு


ஈரோடு அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 5 Dec 2018 3:05 AM IST (Updated: 5 Dec 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே ஆர்.என்.புதூர் சொட்டையம்பாளையம் வயக்காட்டுப்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்கு உள்பட்ட எங்களது பகுதியில் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் கட்டிட வேலை செய்கிறோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்தநிலையில் எங்கள் பகுதிக்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் நாங்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. இதுதொடர்பாக அவர்களிடம் சென்று கேட்டபோது தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story