மாவட்ட செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிப்பு: குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் + "||" + Babri Masjid demolition day tomorrow: 1200 policemen in security in Kumari

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிப்பு: குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிப்பு: குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நாகர்கோவில்,

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


குறிப்பாக பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த மெட்டல் டிடெக்டர் வழியாக தான் செல்ல வேண்டும்.

மேலும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வந்தால் அவர்களில் உடமைகளை சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாது கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்கு படகில் சென்று கண்காணித்து வருகிறார்கள். சர்வேதச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மூலனூர் அருகே 100 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
மூலனூர் அருகே 100 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுபாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. காஷ்மீரில் 5 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது.
3. பெருந்துறை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
பெருந்துறை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
4. சாலை பாதுகாப்பு வார விழா நிறைவு: கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது கவர்னர் ஆவேசம்
கட்டாய ஹெல்மெட் சட்டத்துக்கு சமரசம் கிடையாது. நீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
5. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...