மைசூருவில், தேர்தல் கமிஷன் மாநாடு தேர்தலில் அதிநவீன தொழில்நுட்பங்கள் விரைவில் அமல் இந்திய தேர்தல் ஆணைய உறுப்பினர் பேட்டி
மைசூருவில் தேர்தல் கமிஷன் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்தஇந்தியதேர்தல் ஆணைய உறுப்பினர் பரசுராம், தேர்தல்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவில் அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மைசூரு,
மைசூருவில் தேர்தல் கமிஷன் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்தஇந்தியதேர்தல் ஆணைய உறுப்பினர் பரசுராம், தேர்தல்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவில் அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தேர்தல் கமிஷன் மாநாடு
மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று தேசிய அளவிலான தேர்தல் கமிஷன் மாநாடு நடந்தது. மாநாட்டில் நாட்டில் உள்ள 19 மாநிலங்களின் தேர்தல் கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டை இந்திய தேர்தல் ஆணைய உறுப்பினரும், மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்தல் கமிஷனருமான பரசுராம் தொடங்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
இந்தியாவில் இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்வது, ஆன்லைன் மூலமாக ஓட்டுப்போடுவது மற்றும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் புதுமைகளை புகுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவற்றை தயாரிப்பது, அதுபற்றி மத்திய அரசிடம் எடுத்துரைப்பது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் அமலுக்கு வரும்
அதுமட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடந்த தேர்தல்கள் குறித்த சாதக, பாதகங்கள், குளறுபடிகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. பின்னர் தேர்தலில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தி அவற்றை எவ்வாறு கையாள்வது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தேர்தல் கமிஷனர்கள் கூறியபடி இனிவரும் தேர்தல்களில் புதுமைகள் புகுத்தப்படும். அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். அதன்மூலம் கள்ள ஓட்டு போடுவது முற்றிலும் தடுக்கப்படும். இவை எல்லாம் விரைவில் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாடு இன்றும் (புதன்கிழமை) நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story