மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன் கிழமை) முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 8 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 3 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக் கிழமை) 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்று மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்ப நிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் வட கிழக்கு பருவமழையின் மிதமான தாக்கத்தால், நல்ல மேகமூட்டமும் லேசான மற்றும் மிதமான மழைப்பொழிவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இத்தகைய வானிலையில் அதிக எரிசக்தி கொண்ட தீவனம் மற்றும் பூஞ்சான நச்சற்ற தீவனமும் கோழிகளின் உடல் நலத்தையும், முட்டை உற்பத்தியையும் நல்ல அளவில் தக்க வைத்து கொள்ள உதவும்.
இம்மாதத்தில் தீவன எடுப்பை கட்டுப்படுத்துவதில் ஒரு பெரிய சவால் இருக்கும். தானிய மூலப்பொருட்களில் இருப்பு குறைந்து வரும் இந்த சமயத்தில் மக்காச்சோளத்தின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. கோழித்தீவனத்தில் ஈரம் குறைந்த மக்காச்சோளத்தை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story