விவசாயியை தாக்கிய வழக்கில் கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு


விவசாயியை தாக்கிய வழக்கில் கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை; சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2018 4:11 AM IST (Updated: 5 Dec 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை தாக்கிய வழக்கில் கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

சிவகங்கை,

திருப்புவனத்தை அடுத்த மேலவெள்ளுர்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜா (வயது 38). விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (33). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவியை, ஜெயராஜா கேலி செய்தாராம். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 9.11.2016 அன்று விவசாயியை, கொத்தனார் தாக்கினாராம். அதில் பலத்த காயமடைந்த விவசாயி, தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர்பிழைத்தார்.

இது தொடர்பாக திருப்புவனம் போலீசார் மாரிமுத்துவை கைது செய்து, அவர் மீது சிவகங்கையில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ராதிகா, மாரிமுத்துவிற்கு 7 வருட சிறை தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மதுரை அன்னை வேளாங்கண்ணிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48) இவர் கடந்த 26.8.2009 அன்று தன்னுடைய சொந்த ஊரான சிங்கம்புணரியை அடுத்த மேலப்பட்டி கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த அழகு (40) என்பவர் ராஜேந்திரனை தாக்கி சாதியை குறித்த திட்டினாராம்.

இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி தனியரசு குற்றம் சாட்டப்பட்ட அழகுவிற்கு ஒரு வருட சிறைதண்டனையும், ரூ.600 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story