தார்டுதேவில் 4-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் சாவு போலீஸ் விசாரணை
தார்டுதேவில் 4-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
மும்பை,
தார்டுதேவில் 4-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர்
மும்பை தார்டுதேவில் அகில இந்திய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு (பிசிகல் மெடிசின் அண்டு ரிகபிலிடேசன்) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வினய் பால் (வயது19) என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை விடுதியின் 4-வது மாடியில் இருந்து மாணவர் வினய் பால் திடீரென கீழே விழுந்து விட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள நாயர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீஸ் விசாரணை
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவத்தின் போது, மாணவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கல்லூரியில் பேராசிரியர்கள் திட்டியதன் காரணமாக அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர். எனவே அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story