மாவட்ட செய்திகள்

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி + "||" + thambidurai admitted apollo hospital

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில், தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

இதனையடுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தம்பிதுரையை சந்தித்து நலம் விசாரிக்க முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இரவு 7 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.