ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்


ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்
x
தினத்தந்தி 6 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தஞ்சையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,


மறைந்த முன்னாள் முதல்–அமைச்சரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட, மாநகர பகுதி, ஒன்றியம் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் உள்ள சாந்தி– கமலா தியேட்டர் அருகே இருந்து புறப்பட்டது.

ஊர்வலத்துக்கு மாவட்ட பால்வள தலைவர் காந்தி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் காந்திஜிசாலை, இர்வின்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.


அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாவித்திரிகோபால், மகளிரணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

Next Story