புரசைவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது
வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை சூளை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூரேஷ் (வயது 39). இவரது மோட்டார் சைக்கிள் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி அன்று திருட்டு போய்விட்டது. இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
வேப்பேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்தார்த்த சங்கர்ராய் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். வேப்பேரி, புரசைவாக்கம், சூளை ஆகிய பகுதிகளில் இதுபோல அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனதால், இதுதொடர்பான குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வேப்பேரி போலீசார் நேற்று முன்தினம் புரசைவாக்கம் தானா தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கிப்பிடித்து விசாரித்தபோது, அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் அஜித்குமார், சீனிவாசன், சந்தோஷ், ஏழுமலை என்று தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர்களிடமிருந்து 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story