ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
தூத்துக்குடியில் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அ.தி.மு.க.வினர் நேற்று காலை மவுன ஊர்வலமாக சென்று, அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அ.தி.மு.க.வினர் நேற்று காலை மவுன ஊர்வலமாக சென்று, அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
மவுன ஊர்வலம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று காலை குரூஸ் பர்னாந்து சிலை அருகே இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக சென்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
யார்-யார்?
ஊர்வலத்தில் முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தளபதி கே.பிச்சையா, ஆறுமுகநேரி பேரூராட்சி கழக செயலாளர் அரசகுரு, பசுவந்தனை சதீஷ், காமாட்சி என்ற காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சலி
இதே போன்று தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு ஜெயலலிதா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்புசாரா ஒட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் அந்தோணி கிரேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தேரடி திடல் அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் அரசகுரு தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆத்தூரில் அ.ம.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஷேக் தாவூது, நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குரும்பூர்
குரும்பூரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஒன்றிய அவை தலைவர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் அ.தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு பஞ்சாயத்து செயலாளர் சாமி சுப்புராஜ் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
உடன்குடி
உடன்குடியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகாராஜா தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன்னாள் மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் மனோகரன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story