வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை; கணவர் உள்பட 2 பேர் கைது
ராஜபாளையத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது சகோதரி கவுசல்யா(வயது 26). இவருக்கும் முகவூரை சேர்ந்த காஞ்சித்தலைவன்(33) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு வரதட்சணையாக ரூ.5 லட்சம், 40 பவுன் நகை கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் காஞ்சித்தலைவனின் உறவினர்கள் முனியம்மாள், தமிழ்செல்வி மற்றும் காஞ்சித்தலைவன் ஆகியோர் கூடுதலாக வரதட்சணை கேட்டு கவுசல்யாவை கொடுமைபடுத்தியதாக தெரிகிறது.
மேலும் காஞ்சித்தலைவன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் கவுசல்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சித்தலைவன் மற்றும் தமிழ்செல்வியை கைது செய்தனர்.

Related Tags :
Next Story