நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு


நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நெல்லை மாவட்டத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் நடந்த நினைவு தினத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் தொகுதி செயலாளர் வேல்சாமி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் கட்சியினர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.-அம்மா-ஜெ.தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி-வள்ளியூர்

நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரத்தில் அ.தி.மு.க. நாங்குநேரி ஒன்றிய அவைத்தலைவர் தளவை சுந்தர்ராஜூவும், பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியனும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தென்காசி பூக்கடை பஜாரில் நகர அ.தி.மு.க. சார்பில், நகர செயலாளர் சுடலை தலைமையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலகரத்தில் செயலாளர் கார்த்திக்குமார் தலைமையில், அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். இலஞ்சியில் செயலாளர் மயில்வேலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வள்ளியூரில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் தலைமையில், அ.தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர் தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி-திசையன்விளை

சேரன்மாதேவியில் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ஐசக் பாண்டியன், மேலச்செவல் செக்கடி பஜாரில் நெல்லை புறநகர் மாவட்ட துணை செயலாளர் செவல் முத்துசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் மாரிச்செல்வம் தலைமையிலும், சேரன்மாதேவி ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பிலும் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா தலைமையில் கட்சியினர் திசையன்விளையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் கல்லூரணியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டியன் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பை-ராதாபுரம்

அம்பை பூக்கடை பஜாரில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர்கள் அறிவழகன், சங்கர நாராயணன், ராமையா, நகர செயலர் மதன், பஸ் நிறுத்த வியாபாரிகள் சங்க தலைவர் விஜயபாலாஜி, அரசு வக்கீல்கள் கோமதி சங்கர், முத்து விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில், நகர செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் வேலுசாமி ஆகியோர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ராதாபுரத்தில் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ராதாபுரம்-நாங்குநேரி தாலுக்காக்கள் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் முருகேசன், ராதாபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மதன் உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கடையம் அருகே உள்ள மைலப்பபுரத்தில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வின் தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க. முன்னாள் தலைவர் தேவாசீர்வாதம், உறுப்பினர்கள் ஆரோக்கிய கோயில், ராஜ செல்வம், பால்ராஜ், வேல்முருகன், சிங், அருள், சுந்தரராஜ், பால்துரை, எம்.ஜி.ஆர். சத்துணவு அமைப்பாளர் பால்ராஜ், பிரசன்னா, அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story