நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அம்மா திட்ட முகாம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களின் நலன் கருதி அம்மா திட்டம் என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் கீழ்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
நெல்லை தாலுகா-பதினாலாம்பேரி, அலங்காரபேரி, குப்பக்குறிச்சி கிராமத்திலும், ராதாபுரம் தாலுகா- திருவம்பலாபுரம், அம்பை தாலுகா-சிவந்திபுரம், நாங்குநேரி தாலுகா-சிந்தாமணி, முனைஞ்சிப்பட்டி, சேரன்மாதேவி தாலுகா-புதுக்குடி, வீற்றிருந்தான்குளம், பாளையங்கோட்டை தாலுகா- குலவணிகர்புரம். மானூர் தாலுகா- மதவக்குறிச்சி, சங்கரன்கோவில் தாலுகா-களப்பாகுளம், திருவேங்கடம் தாலுகா-நடுவப்பட்டி, வீரகேரளம்புதூர் தாலுகா-மருக்காலங்குளம், ஆலங்குளம் தாலுகா-குத்தப்பாஞ்சான், சிவகிரி தாலுகா-ராமநாதபுரம், கடையநல்லூர் தாலுகா-பொய்கை, திசையன்விளை தாலுகா-கரைச்சுத்து உவரி.
இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை, உழவர் பாதுகாப்பு அட்டைகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம். கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story