மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 3:30 AM IST (Updated: 6 Dec 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காந்திநகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு புதுவை மாவட்ட கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை மாவட்ட கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் காந்திநகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்டுமான நலவாரியத்தில் வழங்கப்படும் சலுகைகளை பிற மாநிலத்தில் வழங்கப்படும் சலுகைகளை போல உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்ட வழிகாட்டுதலின்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சமும், இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் உதவித்தொகை வழங்க வேண்டும். 60 வயது முடிந்த ஆண் தொழிலாளர்களுக்கும், 55 வயது முடிந்த பெண் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story