மாவட்ட செய்திகள்

சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தகவல் + "||" + Around Rs 30 lakh will be informed at a consultative meeting to prevent road accidents

சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தகவல்

சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தகவல்
அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் செய்யப்பட உள்ளது என்று கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் ராம்கோ சிமெண்டு நிறுவனத்தினர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து ஓட்டக்கோவில் வரை சாலையில் முகப்பு குவி கண்ணாடி வைத்தல், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்காக ரூ.30 லட்சம் செலவு செய்வதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மற்ற தனியார் சிமெண்டு நிறுவனத்தினர் சாலை விபத்தை தடுக்க தடுப்பு அரண்கள், தகுந்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தர கூட்டத்தில் சம்மதித்தனர்.

பின்னர் விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக செந்துறை பைபாஸ் சாலையில் கண் கூசும் விளக்குகள் எரியும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கருப்பு வில்லை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல்லில் பேரிடர் கால முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் ராணுவ அதிகாரி தலைமையில் நடந்தது
நாமக்கல்லில் பேரிடர் காலங்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ராணுவ அதிகாரி தீபக் மண்டல் தலைமையில் நடந்தது.
2. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
3. நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் வெற்றிக்கு வீடு, வீடாக சென்று வாக்குசேகரிக்க வேண்டும் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் வெற்றிக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
4. வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது: பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பா.ஜனதா வேட்பாளர் பட்டியலை அகில இந்திய தலைமை அறிவிக்கும், வேறு யாருக்கும் சிறப்பு அதிகாரம் கிடையாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5. மீனவர்களுக்கு இலவசமாக டீசல் வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
மீனவர்களுக்கு டீசலை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.