மாவட்ட செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம் + "||" + Rural Administration Officers Darna Struggle

கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,

கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி ஆகிய தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், 10-ந்தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் போராட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சை அரசு மருத்துவமனையை ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகை
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தஞ்சை அரசு மருத்துவமனையை ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பெண் ஊழியர்களுக்கு சிலர் பாலியல் தொல்லை அளிப்பதாக குற்றம்சாட்டினர்.
2. கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா 3 பேர் கைது
கூடுதல் நிதி வசூலிப்பதை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் போராட்டம்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
5. தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பட்டாவை திரும்ப வழங்க வலியுறுத்தி மண்டியிட்டு பிச்சை கேட்கும் போராட்டம்
பட்டாவை திரும்ப வழங்க வலியுறுத்தி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் மண்டியிட்டு பிச்சை கேட்கும் போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.