மேல்பட்டாம்பாக்கம்- கண்டரக்கோட்டை வரை சுங்கச்சாலை நீட்டிப்பு - கலெக்டர் ஆய்வு
கடலூர் சுங்கச்சாலை மேல்பட்டாக்கம் - கண்டரக்கோட்டை வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கான இடத்தை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் சுங்கச்சாலை (கஸ்டம்ஸ்) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் மேல்பட்டாம்பாக்கம் வரை போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சாலை 2-ம் கட்டமாக மேல்பட்டாம்பாக்கம் - கண்டரக்கோட்டை வரை 9 கி.மீ. நீளம் நீட்டித்து இணைப்பு சாலையாக போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பகுதிகளை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இணைப்பு சாலை போடுவதற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டுள்ளதா? என ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு பெரியபகண்டை பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி, பெரிய பகண்டையில் இருந்து குமாரமங்கலம், புலவனூர் வழியாக கண்டரக்கோட்டை செல்லும் இணைப்பு சாலை (கஸ்டம்ஸ் சாலை) ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் சிங்காரவேலன், சாந்தி, பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், மண்டல துணை தாசில்தார் தனபதி, அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பிரேமா மற்றும் பொறியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story