தண்டவாள பராமரிப்பு பணி: திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி: திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 9:59 PM GMT)

தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி அருகே பூதலூரில் இருந்து தஞ்சாவூர் வரை ரெயில் தணடவாளங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதியும், ரெயில்களை சுமுகமாக இயக்கவும் இந்த பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் (வ.எண் 76824/76827) வருகிற 8, 15, 22, 29 ஆகிய 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வ.எண் 56824) நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை 25 நாட்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.

* நெல்லை-மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரெயில் (வ.எண் 56822/ 56821) நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) தவிர) திருச்சி-தஞ்சாவூர்-திருச்சி இடையே பகுதி தூரம் சேவை கிடையாது.

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

* திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 16234) மயிலாடுதுறைக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை 50 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

* காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் (வ.எண் 56711) வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை குளக்கரைக்கு 10 நிமிடம் தாமதமாகும்.

*நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வ.எண் 56822) நாளை மயிலாடுதுறைக்கு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றடையும்.

* மயிலாடுதுறை-திருவாரூர் பயணிகள் ரெயில் (வ.எண் 56879) நாளை மயிலாடுதுறையில் இருந்து 20 நிமிடம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

Next Story