எய்ட்ஸ் நோயாளி என்பதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி மருந்து நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவு

எய்ட்ஸ் நோயாளி என்பதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி மருந்து நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:30 PM GMT (Updated: 5 Dec 2018 11:14 PM GMT)

எய்ட்ஸ் நோயாளி என்பதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என மருந்து நிறுவனத்துக்கு தொழிலாளர் நல கோர்ட்டு உத்தரவிட்டது.

புனே, 

எய்ட்ஸ் நோயாளி என்பதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என மருந்து நிறுவனத்துக்கு தொழிலாளர் நல கோர்ட்டு உத்தரவிட்டது.

எய்ட்ஸ் நோயாளி

புனேயை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 2015-ம் ஆண்டு அந்த பெண்ணும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை அறிந்ததும் அவர் பணிபுரிந்து வரும் மருந்து நிறுவன நிர்வாகம், எய்ட்ஸ் நோயாளி என்பதற்காக அவரிடம் வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கி அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளது.

இதனால் அந்த பெண் மனமுடைந்தார். பின்னர் அவர், தனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட கோரி தொழிலாளர் நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மீண்டும் பணி

இந்த வழக்கு விசாரணையின் போது, மருந்து நிறுவனம் தரப்பில், அந்த பெண் தனது சொந்த முடிவின்படியே பணியில் இருந்து விலகியதாகவும், அவருக்கான அனைத்து பணப்பலன்களும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த தொழிலாளர் நல கோர்ட்டு, அண்மையில் தனது உத்தரவை பிறப்பித்தது. அப்போது, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், கடந்த 3 ஆண்டுகளுக்கான நிலுவை சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Next Story