மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது + "||" + Near Kancheepuram In the case of jewelry theft Young man arrested

காஞ்சீபுரம் அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது

காஞ்சீபுரம் அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது
காஞ்சீபுரம் அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம், மதுராந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன், பழ வியாபாரி, இவரது வீட்டில், உறவினர் ஒருவர் உடல்நலமின்றி இருந்தார். அவரை குணமாக்க காஞ்சீபுரம் பொய்யாக்குளத்தை சேர்ந்த தினேஷ் (வயது22) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.


பின்னர் தினேஷ் அந்த வீட்டுக்கு சென்று சாமி ஆடி குறி சொன்னார். மேலும் பல முறை வந்து நோய்வாய்ப்பட்டவருக்கு குறி சொல்லி சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் திருடப்பட்டது.

இது குறித்து ஆனந்தன் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தினேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ், ஆனந்தன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தினேஷை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...