மாவட்ட செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை + "||" + Near the sunguvarchatram Debt troublesome The owner of the hotel suicide

சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை
சுங்குவார்சத்திரம் அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பாப்பான்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 47). இவர் சந்தவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலில் வியாபாரம் சரியாக இல்லாததால் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.


இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

கடந்த 30-ந்தேதி கடன் தொல்லை தாங்காமல் ராஜேஷ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி வழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜேஷை சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.