நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-07T00:55:10+05:30)

பாபர் மசூதி இடிக்கப் பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

பாபர் மசூதி இடிக்கப் பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யா பிள்ளை, நாகை மாவட்ட தலைவி சுலைஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் சாதிக், யாமின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நாகை நகர தலைவர் பகுருதீன் நன்றி கூறினார்.

Next Story