நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி நண்பர் படுகாயம்


நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Dec 2018 3:00 AM IST (Updated: 7 Dec 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

வியாபாரி பலி

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் பீர்முகமது (வயது 50) வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அசன் மைதீன் (37). நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லை மேலப்பாளையத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அசன் மைதீன் ஓட்டினார்.

நாங்குநேரி அருகே உள்ள பானான்குளம் அருகே சென்றபோது, அந்த பகுதியில் ஒரு கார் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பீர்முகமது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அசன் மைதீன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அசன் மைதீனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பீர்முகமதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த வள்ளியூரை சேர்ந்த சிவதானுபிள்ளை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story