நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:45 PM GMT (Updated: 6 Dec 2018 9:08 PM GMT)

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர்,

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள, அவரது முழு உருவச்சிலைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில், அந்தந்த கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு, லோக் ஜனசக்தி கட்சியினர் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல பல்வேறு அமைப்புகள் சார்பிலும், இளைஞர்கள், பொதுமக்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சங்குப்பேட்டை பகுதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு, அந்தப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் பா.ம.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜெயராமன், மாவட்ட துணைத்தலைவர் பாலசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டத்தில் ஆசிரியர் கூட்டணி மற்றும் அரசு ஐக்கிய பேரவை, மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கு அனைத்து ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அரசு ஐக்கிய பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story