மாவட்ட செய்திகள்

நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + On the occasion of the Memorial, the political party will honor the statue of Ambedkar

நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

நினைவு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை,

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தன் தலைமையில் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் துரை.திவ்யநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் விடுதலை கணல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. சார்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பரஞ்சோதியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மாதவனும், திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல தலைவர் ராவணனும், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரனும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
2. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3. கரூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு சிலைக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மரியாதை
கரூரில் அண்ணா நினைவுதினத்தை யொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
4. தஞ்சையில், நினைவு நாளையொட்டி அண்ணாசிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு
தஞ்சையில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
5. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.