காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது
மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மதுரை,
காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் இளநிலை, முதுநிலை, பி.எட்., பட்டப்படிப்புகள், பி.எல்.ஐ.எஸ்.சி., எம்.எல்.ஐ.எஸ்.சி., பி.ஜி.எல்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, திறந்தவெளி தொடக்கநிலை, அடிப்படை மற்றும் நிலைப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடக்கவில்லை.
இந்த நிலையில், மேற்கண்ட படிப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ,மாணவிகள் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர்கள் ரூ.300 அபராதத்துடன் வருகிற 17-ந் தேதிக்குள்ளும், ரூ.500 அபராதத்துடன் வருகிற 24-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியில் ஆன்-லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட். தேர்வுகள் மட்டும் அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்க உள்ளது. பிற பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளன.
தேர்வு விண்ணப்பங்களை பல் கலைக்கழகத்தின் www.mku-d-de.org என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 31-ந் தேதிக்குள் பல்கலைக்கழகத்தின் கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் ஆன் லைனில் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொலைநிலைக்கல்வியில் படிக்கும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story