பரமக்குடியில் ஊருணி ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி


பரமக்குடியில் ஊருணி ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 7 Dec 2018 4:50 AM IST (Updated: 7 Dec 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் ஊருணி ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

பரமக்குடி,

பரமக்குடி பகுதியில் இருந்த ஊருணிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுஉள்ளன. இதனால் பரமக்குடியில் இருந்த ஊருணிகளையே காணாத நிலை ஏற்பட்டுஉள்ளது. இது குறித்து வருவாய்த்துறையினருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் ஏராளமான புகார் மனுக்கள் வந்துள்ளன.

அதைத்தொடர்ந்து காட்டுப்பரமக்குடி, முதலியார் ஊருணி, பாலன்நகர் ஊருணி, பூ ஸ்துதி ஊருணி, வாணியர் உறவின்முறை ஊருணி மற்றும் வேந்தோணி வரத்துக்கால்வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை ஆவணங்களின்படி சர்வே செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாசில்தார் பரமசிவன் கூறும்போது, முதல் கட்டமாக ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

Next Story