கோவில் நிலங்களுக்கு வாடகை பாக்கி ; 2,491 பேருக்கு நோட்டீசு - அறநிலையத்துறை உதவி ஆணையர் நடவடிக்கை


கோவில் நிலங்களுக்கு வாடகை பாக்கி ; 2,491 பேருக்கு நோட்டீசு -  அறநிலையத்துறை உதவி ஆணையர் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-07T04:57:13+05:30)

கோவில் நிலங்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ள 2,491 பேருக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் நோட்டீசு வழங்கி உள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான இந்து கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறவர்களும், கோவிலுக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துகிறவர்களில் பலரும் முறையாக வாடகை செலுத்துவதில்லை. இதனால் கோவில் சொத்துக்களை கணக்கெடுத்து குத்தகைதாரர்களை கண்டு பிடிப்பதற்காக ஒவ்வொரு கோவில்களுக்கும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.மாவட்டத்தில் உள்ள 1,627 கோவில்களில் 1,457 கோவில்களுக்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 140 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளக்கப்பட்டு யார்-யார்? குத்தகை, வாடகை பாக்கி வைத்து உள்ளனர் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 2,491 பேருக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காக தொல்பொருள் ஆய்வுத்துறையின் ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் 26 கோவில்களுக்கு திருப்பணி நடத்த தொல்பொருள் துறை பரிந்துரை செய்துள்ளது. அதில் டி.புடையூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்ய 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

Next Story