மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில்நடிகை மாதுரி தீக்சித்தை களமிறக்க பா.ஜனதா திட்டம் + "||" + Parliamentary elections Actress Madhuri Dixit BJP's plan

நாடாளுமன்ற தேர்தலில்நடிகை மாதுரி தீக்சித்தை களமிறக்க பா.ஜனதா திட்டம்

நாடாளுமன்ற தேர்தலில்நடிகை மாதுரி தீக்சித்தை களமிறக்க பா.ஜனதா திட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் புனே தொகுதியில் நடிகை மாதுரி தீக்சித்தை களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் புனே தொகுதியில் நடிகை மாதுரி தீக்சித்தை களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

நடிகைக்கு வாய்ப்பு

பா.ஜனதா தலைவர் அமித் ஷா கடந்த சில மாதங்களுக்கு முன் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்தார். அப்போது அமித்ஷா மத்திய அரசின் 4 ஆண்டு சாதனைகளை அவர்களிடம் விளக்கி கூறினார். இதுதொடர்பாக அமித் ஷா இந்தி நடிகை மாதுரி தீக்சித்தை மும்பையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து இருந்தார்.

இந்தநிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புனே தொகுதியில் நடிகை மாதுரி தீக்சித்தை நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மாநில மூத்த பா.ஜனதா மந்திரி ஒருவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் நடிகை மாதுரி தீக்சித்தை களமிறக்குவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. அவருக்கு புனே நாடாளுமன்ற தொகுதி போட்டியிட சரியாக இருக்கும் என்று கருதுகிறோம். அதன்படி புனே தொகுதியை அவருக்கு பரிந்துரை செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காரணம் என்ன?

புனே நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் அனில் ஷிரோலே காங்கிரஸ் வேட்பாளரை 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். எனினும் அந்த தொகுதியில் வேட்பாளரை மாற்ற பா.ஜனதா முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகு அடுத்து நடந்த தேர்தல்களில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனால் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 2017-ம் ஆண்டு நடந்த டெல்லி உள்ளாட்சி தேர்தலில் கூட பழையவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் அங்கு கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.