மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில்துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்கலெக்டர் உத்தரவு + "||" + Thiruvannamalai district Subdirectory Workplace Transfer Collector's order

திருவண்ணாமலை மாவட்டத்தில்துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில்துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் 11 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்தும், 6 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பதவி உயர்வு செய்தும் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ‘எம்’ பிரிவு தலைமை உதவியாளர் என்.சாரதா கலெக்டர் அலுவலகத்தில் ‘டி’ பிரிவு தலைமை உதவியாளராகவும், அங்கிருந்த எஸ்.அகத்தீஸ்வரன் வந்தவாசி தாலுகா தெள்ளார் மண்டல துணை தாசில்தாரராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

செய்யாறு தேர்தல் பிரிவு துணை தாசில்தார் அசோக்குமார் சேத்துப்பட்டு தாலுகா மண்டல துணை தாசில்தாரராகவும், அங்கு பணிபுரிந்த சசிகலா கலசபாக்கம் தாலுகா மண்டல துணை தாசில்தாரராகவும், அங்கிருந்த கோவிந்தராஜன் கலசபாக்கம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாரராகவும், அங்கு பணியாற்றிய கே.துரைராஜ் செங்கம் மண்டல துணை தாசில்தாரராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கம் மண்டல துணை தாசில்தார் சி.முனுசாமி செங்கம் தலைமையிடத்து துணை தாசில்தாரராகவும், அங்கிருந்த லதா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். செங்கம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் எம்.சாந்தி கீழ்பென்னாத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தாரராகவும், அங்கு பணி புரிந்த கே.சீத்தாராமன் திருவண்ணாமலை தலைமையிடத்து துணை தாசில்தாரராகவும், அங்கிருந்த சண்முகம் திருவண்ணாமலை மண்டல துணை தாசில்தாரராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிவலிங்கம் கலெக்டர் அலுவலக ‘எம்’ பிரிவு தலைமை உதவியாளராகவும், வந்தவாசி தாலுகா அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் எஸ்.ஆனந்தகுமார் போளூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாரராகவும், சேத்துப்பட்டு தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு திட்டம் தனி வருவாய் ஆய்வாளர் எம்.காஜா திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

வெம்பாக்கம் தாசில்தார் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் வி.சுகுமார் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், துரிஞ்சாபுரம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஜி.ஸ்ரீதேவி கலெக்டர் அலுவலக ‘பி’ பிரிவு தலைமை உதவியாளராகவும், செங்கம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு திட்டம் தனி வருவாய் ஆய்வாளர் தமிழரசி செங்கம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாரராகவும் பதவி பெற்று உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...